குடி போதையில் அரிவாளுடன் தகராறு செய்தவர் அடித்துக் கொலை; மூவர் கைது

சங்கரன்கோவில் அருகே மது போதையில் அரிவாளுடன் தகராறு செய்தவரை அடித்துக் கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-29 05:15 GMT
குடி போதையில் அரிவாளுடன் தகராறு செய்தவர் அடித்துக் கொலை; மூவர் கைது

மேலநீலிதநல்லூர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

  • whatsapp icon

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமகராஜா(55). இவர் மது போதையில் அரிவாளுடன் சாலையில் செல்லும் பொதுமக்களை மறித்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அப்பகுதி வழியாக பால் வியபாரி மகராஜா இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அரிவாளை காட்டி வழிமறித்து பால் கேனை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் சின்ன மகராஜாவிற்கும் பால் வியபாரி மகராஜாவிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த மகராஜாவின் உறவினரான ராமர்பாண்டி, செல்லப்பண்டி ஆகிய இருவர் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் இருந்த உருட்டு கட்டையால் தலையில் தாக்கியதில் சின்னமகராஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பனவடலிசத்திரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி மகராஜா, ராமர்பாண்டி, செல்லப்பாண்டி, ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் அரிவாள் வைத்து தகராறில் ஈடுபட்டவரை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த சம்வவம் சங்கரன்கோவில் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News