மேலநீலிதநல்லூர் ஒன்றிய பெருந்தலைவராக திமுகவை சேர்ந்த மாதவி தேர்வு

மேலநீலிதநல்லூர் ஒன்றிய பெருந்தலைவராக திமுகவை சேர்ந்த மாதவி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2021-10-22 10:30 GMT
மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மேனாக தேர்வு செய்யப்பட்ட மாதவி

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி உள்ளது. இதில் திமுக எட்டு இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்கிறது .நான்கு பேர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

1வது வார்டில் சுந்தரி, இரண்டாவது வார்டில் முருகன், 3வது வார்டில் முத்துமாரி, 5 வது வார்டில் அருள் சீலி, 6வது வார்டில் வேல்மயில், 7வது வார்டில் பாரதிகண்ணன், 9வது வார்டில் மாதவி, 10வது வார்டு அமுதா, 12 வது வார்டில் பிரேமா ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

நாலாவது வார்டில் கணேசன், 8வது வார்டில் ராமலட்சுமி, பத்தாவது வாரத்தில் அமுதா 11வது வார்டு சுஜிதா ஆகியோர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 20ம் தேதி  ஒன்றிய கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இன்று காலை பரபரபபான சூழ்நிலையில் சேர்மேன் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த 9வது வார்டு கவுன்சிலர் மாதவி, அதே திமுகவைச் சேர்ந்த 3வது வார்டு கவன்சிலர் முத்துமாரி போட்டியிட்டனர்.இதில் மாதவி 8 வாக்குகளை பெற்றார். முத்துமாரி 4 வாக்குகளை பெற்றார். நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் மாதவி வெற்றிப் பெற்று சேர்மேன் ஆனார். 

Tags:    

Similar News