சங்கரன்கோவில் பேருந்துநிலைய குடிநீர் தொட்டியில் பல்லி: பாெதுமக்கள் அதிர்ச்சி
சங்கரன்கோவில் பேருந்துநிலையத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் பல்லி இறந்து மிதக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.;
சங்கரன்கோவில் பேருந்துநிலையத்தில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தேக்க தொட்டியில் பல்லி இறந்து மிதக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் பயணிகளின் குடிநீர் தேவைக்காக குடிநீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. இந்த டேங்கான அசுத்தமான முறையில் பயணிகள் தண்ணீர்; பிடித்து குடிப்பதற்கு தேவையான எந்த விதமான வசதிகளும் இல்லாமல் இடிந்த நிலையில் கொசு, புழு, ஆகியவை தேங்கிய நிலையில் இருந்து வருகிறது. இந்த குடிநீர் டேங்கானது பொதுமக்களின் பயன்பாட்டை விட பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டல்களுக்கு தண்ணீரை எடுத்து செல்கின்றனர். மேலும் இந்த டேங்கை சுத்தம் செய்து பல மாதங்களுக்கு மேலாக இருப்பதால் தண்ணீர் முழுவதும் பாசம் பிடித்து அசுத்தமான முறையில் பல்லி இறந்து மிதந்து வருகிறது.
தினந்தோறும் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறமக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் டேங்கில் பல்லி செத்து மிதந்து அசுத்தமான முறையில் காணப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்களின் நலனில் அக்கறை இல்லாமல் மெத்தனமாக செயல்பட்டு வரும் நகராட்சி ஆணையர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அசுத்தமான முறையில் உள்ள தண்ணீர் டேங்கை சுத்தம் செய்து முறையான வசதிகள் செய்து தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.