குருவிகுளம்: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிரமாங்களில், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.;

Update: 2021-10-09 09:45 GMT

சங்கரன்கோவில், குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில், நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த பொதுமக்கள்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில்,  பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் ஏதேனும் அசாம்பிவத சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஒவ்வொரு வாக்குசாவடி மையங்களிலும் கூடுதலாக காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் டிஎஸ்பி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்தனர். 

Tags:    

Similar News