சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மூழ்கி சட்டக்கல்லூரி மாணவர் பலி
சங்கரன்கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி திருமலைச்சாமி. இவரது மகன் தர்மராஜ். கோயம்புத்தூரில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் மூன்றாம் படித்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த தர்மராஜ். கிராமத்தில் உள்ள அவரது விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக கயிறு கட்டி நீந்தக் கற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்துவிழுண்டஹ்து. இதனால் செய்து செய்வதறியாது கிணற்று நீரில் தத்தளித்த மாணவர் தர்மராஜ், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து, சங்கரன்கோயில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தர்மராஜன் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டக்கல்லூரி மாணவர் தர்மராஜ் உயிரிழந்தது, அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.