களப்பாகுளம் பஞ்., தலைவர் சுயேட்சை வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு
களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சிவசங்கரிக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்றனர்.;
களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சிவசங்கரிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் சுயச்சை வேட்பாளர் சிவசங்கரி. இவர் புளியம்பட்டி கிராமத்தில் பூட்டு சாவி சின்னத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கிராம மக்கள் அனைவரும் ஆரத்தி எடுத்து குலவையிட்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிவசங்கரியின் ஆதரவாளர்கள் பூட்டு சாவி சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.