சங்கரன்கோவிலில் மல்லிகை பூ விலை உயர்வு : கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை

சங்கரன்கோவில் மல்லிகை பூ கடும் விலை உயர்வு கிலோ 2000 ரூபாய் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Update: 2021-12-31 07:00 GMT

சங்கரன்கோவில் மல்லிகை பூ கடும் விலை உயர்வு கிலோ 2000 ரூபாய் விற்பனை ஆகியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட் தென்தமிழகத்தில் முக்கியமான  விற்பனை  சந்தையாகத் திகழ்கிறது. இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை பூ பிச்சிப் பூ கனகாம்பரம் செவ்வந்தி பூ போன்ற பூக்கள் பயிரிடப்பட்ட சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனையாகிறது.இங்கிருந்து, திருநெல்வேலி, தோவாளை, திருவனந்தபுரம் மற்றும் வெளிநாடுகளுக்கும் பூ விற்பனையாகிறது.

இன்று மாத கடைசி என்பதாலும் நாளை ஆங்கில புதுவருடப் பிறப்பு என்பதாலும் பூவின் தேவை அதிகரித்துள்ளது மேலும் பூ விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் இன்று மல்லிகை பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags:    

Similar News