சங்கரன்கோவில் அருகே சட்டவிராேதமாக மதுபானங்கள் பதுக்கல்: 14 பேர் கைது
சங்கரன்கோவிலில் சட்ட விரோதமாக மது பானங்கள் பதுக்கி வைத்திருந்த 14 பேர் கைது. 200-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் பறிமுதல்.;
சங்கரன்கோவில் பகுதிகளில் சட்ட விரோதமாக மது பானங்கள் பதுக்கி வைத்திருந்த 14 பேர் கைது: 200-க்கும் மேற்பட்ட மது பானங்கள் பறிமுதல்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம், பனவடலிசத்திரம் உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக மது பானங்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் போலீசார் 14 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 200-க்கும் மேற்பட்ட மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.