சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல்: அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்
சட்டவிரோதமாக 1.7 கிலோ கஞ்சாவை வாகனத்தில் ஏற்றி வந்த நபரை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்;
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை திறன்பட கண்டறிந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேகர் என்ற நபர் சட்டவிரோதமாக கஞ்சா ஏற்றி வருவதாக தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் K.V நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலாயுதபுரம் சோதனைச்சாவடியில் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் தனிப்படை சார்பு ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் சட்டவிரோதமாக வாகனத்தில் கஞ்சா ஏற்றி வந்த ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவரின் மகன் சேகர் (35) என்ற நபரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 1.7 கிலோ கஞ்சா மற்றும் அசோக் லைலாண்ட் தோஸ்த் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.