சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனங்கள் மாேதியதில் கணவன், மனைவி படுகாயம்

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி விபத்தில் படுகாயம்.;

Update: 2021-12-29 09:00 GMT

விபத்தில் காயமடைந்த கவிதா.

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி விபத்தில் படுகாயம்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வல்லராமபுரத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி மகன் சண்முகராஜ் இவரும், இவரது மனைவி கவிதா ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது நகரம் அருகே எதிரே வந்த இரண்டு சக்கர வாகனம் மோதி இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து புளியங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News