சங்கரன்கோவிலில் காவல்துறையினரை கண்டித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் காவல்துறையினரை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
சங்கரன்கோவிலில் காவல்துறையை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கரன்கோவிலில் இந்து அமைப்பினர் புளியங்குடி காவல் துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 25ம் தேதி திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இந்து அமைப்புகள் கூட்டம் நடந்த இடம் வழியாக சென்று சிவாயநமஹபாடல் பாடி எதிர்ப்பு தெரிவித்து கோவில் மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணியினரின் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி பெறவில்லை.
இதன் காரணமாக கோவில் வாசலுக்கு வந்த காவல்துறையினர் இந்து முன்னணி மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதால் அனைவரையும் குண்டுகட்டாக போலீசார் தூக்கி சென்று கைது செய்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் காவல்துறையினரை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில் இன்று சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில், மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம்,பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்துக்கள் மீது விரோதமாக செயல்பட்ட காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போராட்டம் நடைபெற்ற இடத்தை சுற்றி அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.