சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை
சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.;
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாப்பகுதிகளான இருமன்குளம், களப்பாகுளம், புளியம்பட்டி, ஆனையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
அதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த வந்த நிலையில் தற்போது பெய்த மழையினால் குளுமையான சூழல் நிலவி வருகிறது.