சங்கரன்கோவில் பகுதியில் கனமழை: சங்கரலிங்கனார் கோவிலில் புகுந்த மழை நீர்

சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் சங்கரலிங்கனார் கோவிலில் மழை நீர் புகுந்தது

Update: 2024-10-14 12:15 GMT

சங்கரலிங்கனார் கோவில் வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை,கோவை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை  பெய்தது.

வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று இரவு முதல் பதினெட்டாம் தேதி வரை படிப்படியாக மலை அதிகரித்து கனமழை செய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெய்த கனமழை காரணமாக சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்குள் உள்ள பிரகார வீதியில் மழை நீர் தேங்கியது. அதனை அகற்றும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள சில கடைகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் கடைக்குள் இருந்து தண்ணீரை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஏற்கனவே பயிர் வகைகளை விதைத்து விட்டு மழைக்காக ஏங்கித் தவித்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் அதிகரித்து வந்த சங்கரன்கோவில் சுற்றுப்பகுதி மக்களுக்கு இன்று ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News