சங்கரன்கோவில் சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
சங்கரன் கோவில் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், இருமன்குளம், நகரம், தலைவன்கோட்டை, புளியங்குடி, கரிவலம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்றுடன் பெய்த இந்த கன மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.