பணிமாறுதலுக்கு பேரம் பேசிய சுகாதார ஆய்வாளர்: பணியிடை நீக்கம் செய்த நகராட்சி இயக்குநர்
புளியங்குடி நகராட்சி ஆய்வாளர் பணிமாறுதலுக்கு பேரம் பேசிய ஆடியோ வெளியாகியத்தை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் பாலசந்தர் பணியிடை நீக்கம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாலசந்தர். இவர் வேறெரு நகராட்சியில் பணிபுரியும் ஒருவருக்கு பணிமாறுதல் செய்வதற்காக அமைச்சர் அலுவலக பெயரை கூறி இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பேரம் பேசிய ஆடியோ வெளியானது. இதனை தொடர்ந்து புளியங்குடி நகராட்சி சுகாதர ஆய்வாளர் பாலச்சந்தர் பணியிடை நீக்கம் செய்து நகராட்சி இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் நெல்லை மண்டல நகராட்சி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நகராட்சி துறையை சேர்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.