அரிசி ஆலை கழிவு நீரால் சுகாதார கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சங்கரன்கோவிலில் உள்ள ஐவராஜா நகர்பகுதியில் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2022-01-06 08:15 GMT

ஐவராஜா நகர்ப்பகுதியில் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

சங்கரன்கோவிலில் உள்ள ஐவராஜா நகர்ப்பகுதியில் அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழும் பகுதியாக ஐவராஜா நகர் உள்ளது. இந்த நகர் பகுதிக்கு அருகிலேயே இலங்கைத் தமிழர் குடியிருப்புப் பகுதி உள்ளது. இரண்டு குடியிருப்புப் பகுதிகளுக்கும் நடுவே ஒரு தனியார் அரிசி ஆலை உள்ளது.

இந்த அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது இரண்டு குடியிருப்பு பகுதிகளுக்கும் நடுவே குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், இந்த கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி வீடுகளில் வசிக்க முடிவதில்லை எனவும் இந்த நகர் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த கழிவு நீரை வெளியேற்ற தற்காலிகமாக வாய்க்கால் போன்று பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்த வாய்க்காலை கடக்க முடியாமல் குழந்தைகளும் பெண்களும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் இந்த நகர் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தனியார் அரிசி ஆலையின் மீது நடவடிக்கை எடுத்து கழிவு நீரை சுத்தப்படுத்தி தர வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News