சங்கரன்கோவிலில் வீட்டின் கிரில் கேட்டில் பதுங்கியிருந்த பாம்பு
சங்கரன்கோவிலில் வீட்டின் முன்பு உள்ள கிரில் கதவில் பதுங்கியிருந்த சாரைப் பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் கனிஷ்கர் என்பவரது வீட்டில் சுமார் 4 அடி சாரப்பாம்பு காணப்பட்டது. இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் பயந்து அங்கும் இங்குமாக ஓடினர்.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் பணியாளர்கள் விரைந்து சென்று வீட்டின் பின் கிரில்கேட்டில் மாட்டியிருந்த சாரைம்பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.பின்னர் அந்த பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.