கொரோனா தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பரிசு: அதிமுக பிரமுகர் அசத்தல்

சங்கரன்கோவில் காவேரிநகர் பகுதியில் நடந்த முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பரிசு வழங்கிய அதிமுக பிரமுகர்.;

Update: 2021-09-07 08:00 GMT

சங்கரன்கோவில் காவேரிநகர் பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பரிசு வழங்கிய அதிமுக பிரமுகர் சௌந்தர் என்ற சாகுல் மீது.

சங்கரன்கோவில் காவேரி நகர் பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் பரிசு வழங்கிய அதிமுக பிரமுகர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட காவேரிநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் அதிமுக பிரமுகர் சௌந்தர் என்ற சாகுல் மீது நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து அவரது வீட்டின் முன்பு கொரோனா தடுப்பூசி முகாமினை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் தடுப்பூசி செலுத்திய அனைவருக்கும் கிரைண்டர், குக்கர், ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை குலுக்கல் முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News