கொரோனா தடுப்பூசி முகாமில் குலுக்கல் முறையில் பரிசுப்பொருட்கள் வழங்கல்
சங்கரன்கோவிலில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுப்பொருட்கள்.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சாரதிராம் அறக்கட்டளை மற்றும் சங்கரன்கோவில் நகராட்சி இணைந்து நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவருக்கும் குலுக்கல் முறையில் முதல் பரிசு வழங்கப்படும் என சாரதிராம் அறக்கட்டளையினர் தெரிவித்திருந்தனர்.
இதனைதொடர்ந்து மாலை தடுப்பூசி செலுத்திய 300க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் துண்டு சீட்டில் எழுதப்பட்டு அதனை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு குலுக்கி அங்கு நின்ற மருத்துவர்கள், மாணவர்கள், நகராட்சிதுறையை சேர்ந்த அதிகாரிகள் மூலம் எடுக்கப்பட்டது.
அதில் முதல் பரிசு மாரிச்செல்வம் LED TV, இராண்டாம் கோவிந்தன் பரிசு ப்ரிஜ், மூன்றாம் பரிசு லாரன்ஸ் வாசிங் மிசின், நான்காம் பரிசு நந்தினி கிரைண்டர், ஐந்தாம் பரிசு மாரிச்சாமி கிரைண்டர், ஆறாம் பரிசு பிச்சம்மாள் மிக்சி, எழாம் பரிசு துர்க்காதேவி குக்கர், எட்டாம் பரிசு உலகம்மாள் கேஸ்ஸ்டவ், ஒன்பதாம் பரிசு மாரியம்மாள் அயன்பாக்ஸ், பத்தாம் பரிசு ராமலட்சுமி எலக்ட்ரிக் ஸ்டவ் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சாரதிராம் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உட்பட சுகாரத்துறையினர், நகராட்சித்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு வழங்கினார்கள்.