சங்கரன்கோவிலில் அடிக்கடி தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கு: பாெதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைக்கும் அவலநிலையால் குடியிருப்புவாசிகள் அவதி.;

Update: 2021-09-08 12:45 GMT

சங்கரன்கோவில் நகராட்சி குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிவதால் தீயணைப்புத்துறையினர் அணைத்து வருகின்றனர்.

சங்கரன்கோவில் நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ வைக்கும் அவலநிலையால் குடியிருப்புவாசிகள் அவதி. தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட முப்பது வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அதனை தரம் பிரித்து அப்புறப்படுத்தாமல் அதனை நகராட்சி குப்பைகளை சேகரிக்கும் ஒப்பந்தகாரரே மாதத்திற்கு ஐந்து முறை தீ வைத்து விடுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

தீ வைப்பதனால் அப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உட்பட வட்டாட்சியர் அலவலகமும் புகைமண்டலாக காட்சியளிக்கிறது. அதனால் சுவாசிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி குப்பைகிடங்கில் எரிந்து வரும் தீயை சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் அனைத்து வருகின்றனர்.

மேலும் குப்பை கிடங்கு கோவில்பட்டி செல்லும் பிராதான சாலை என்பவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மாற்றுப்பாதையில் செல்லக்கூடிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அடிக்கடி குப்பைக்கிடங்கில் தீ வைக்கும் ஒப்பந்தக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News