முன்னாள் ராணுவத்தினர் சார்பில் அக். 31ல் இலவச கண் சிகிச்சை முகாம்
சங்கரன்கோவிலில், முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பில், வரும் 31ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.;
மாதிரி படம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள, அகில இந்திய முன்னாள் இராணுவத்தினர் சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவக கண் சிகிச்சை முகாம், நாளை மறுநாள் 31.10.2021 அன்று, சங்கரன்கோவில் இராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள அகில இந்திய முன்னாள் இராணுவத்தினர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது.
இதில் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பல்வேறு குறைபாடு உள்ளவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம், ஏற்கனவே கண்ணாடி அணிந்தவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்யலாம். குறைந்த விலையில் கண் கண்ணாடிகள் கிடைக்கும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என அகில இந்திய முன்னாள் இராணுத்தினர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.