முன்னாள் அமைச்சர் கருப்பசாமி நினைவு தினம்: அதிமுகவினர் மலர் தூவி மரியாதை
சங்கரன்கோவிலில் மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் 11வது நினைவு தினத்தையாெட்டி நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை.;
சங்கரன்கோவிலில் மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமி 11வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சங்கரன்கோவிலில் மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமி அவர்களின் 11வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் 5 முறை தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த வரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அமைச்சரவையில் விளையாட்டுத்துறை, கால்நடைத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என பல துறைகளில் அமைச்சராக சீரிய முறையில் பணியாற்றியவரும் மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமி அவர்கள் அவரது 11வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த கிராமமான புளியம்பட்டியில் உள்ள நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கழக மகளிர் அணி துணைச் செயலாளருமான VM ராஜலட்சுமி மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் என்ற ராஜீ, நகரக் கழகச் செயலாளர் ஆறுமுகம் மற்றும் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்