சங்கரன்கோவிலில் விபத்தில்லா தீபாவளியை காெண்டாட தீயணைப்புதுறையினர் விழிப்புணர்வு

சங்கரன்கோவிலில் பல்வேறு இடங்களில் விபத்தில்லா தீபாவளி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்புதுறையினர் நடத்தினார்கள்.

Update: 2021-11-02 05:00 GMT

சங்கரன்கோவில் பேருந்த நிலையத்தில் தீயணைப்புத்துறையினர் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சங்கரன்கோவிலில் பல்வேறு இடங்களில் விபத்தில்லா தீபாவளி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை தீயணைப்புதுறையினர் நடத்தினார்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையின் நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கடந்த ஒரு வாரத்தில் சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பேருந்து நிலையம், தனியார் மற்றும் அரசு பள்ளி, தனியார் மருத்துவமனை, வணிக வளாகங்களில் உள்ள கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.

மேலும் எந்த ஒரு இடத்திலும் எதிர்பாராமல் தீவிபத்து நடக்கும் போது அதனை எந்தவித அச்சமும் பதட்டமும் இல்லாமல் எந்த முறையான பொருட்களை கொண்டு அணைக்க வேண்டும் என்று செயல்முறை விளக்கங்களோடு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனால் சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News