சங்கரன்கோவில் குப்பை கிடங்கில் தீ விபத்து: போராடி அணைத்த தீயணைப்புத்துறையினர்
சங்கரன்கோவில் நகாராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் தீ விபத்து. தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.
சங்கரன்கோவிலில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் தீ விபத்து. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்து வரும் தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகாரட்சிக்கு சொந்தமான குப்பகை கிடங்கில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீ பிடித்து எரிந்து வருவதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை தரம்பிரிக்காமல் நகராட்சி ஊழியர்களே தீ வைப்பதாக குடியிருப்புவாசிகள் குற்றசாட்டுகின்றனர். எனவே இது போன்று பல முறை குப்பைகிடங்களில் தீ எரிவது வாடிக்கையாகி வருவதால் தீயணைப்புத்துறையினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ வைக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாகும்.