மீண்டும் புதுப்பொலிவுடன் உழவர் சந்தை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ.ராஜா உழவர் சந்தையை துவக்கி வைத்து விவசாயிகளிடம் முதல் விற்பனையாக காய்கறிகளை பெற்றுக் கொண்டார்

Update: 2021-08-18 08:15 GMT

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா உழவர் சந்தையை இன்று தொடங்கி வைத்து விவசாயிகளிடம் முதல் விற்பனையாக காய்கறிகளை பெற்றுக் கொண்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த திமுக ஆட்சியில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த உழவர் சந்தை கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் காரணமாக செயல்படாமல் இருந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் இயங்கி வந்த உழவர் சந்தை புதுப்பிக்கப்பட்டு பொலிவு பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவிலில் உழவர் சந்தை புதுப்பொலிவுடன் இன்று தொடங்கப்பட்டது.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்  ஈ.ராஜா  உழவர் சந்தையை இன்று  தொடங்கி வைத்து விவசாயிகளிடம் முதல் விற்பனையாக காய்கறிகளை பெற்றுக் கொண்டார். மேலும் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் ஆலோசனைகளை வழங்கினார்.

உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை / தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News