சங்கரன்கோவிலில் வைகோவை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
சங்கரன்கோவிலில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வாயிலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இராஜா தனது தொகுதிக்குட்பட்ட சாயமலை ஆரம்ப சுகாதார நிலைத்தை தர உயர்த்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணித்திடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
அதே போல் மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தை தரம் உயர்த்தாமல் வேறொரு அரசு ஆரம்ப சுகாதாராநிலையத்தை எப்படி தர உயர்த்த மனு அளிப்பாய் என சட்டமன்ற உறுப்பினர் ராஜாவை போனில் தொடர்பு கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகே எச்சரித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரமானது சமூக வலைதளங்களில் பரவி தமிழக அரசியலில் பேசும் பொருளாக சில நாட்களாக மறியுள்ளது.
இந்நிலையில் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இராஜாவை தரக்குறைவாக பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கண்டித்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வாயில் உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.