சங்கரன்காேவில் காேமதி அம்பாள் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தலைமையாசிரியர் இனிப்புகள் வழங்கி வரவேற்பு.

Update: 2021-11-01 05:04 GMT

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர், தலைமையாசிரியர் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளி திறக்கப்படாத நிலையில் கொரோனா விதிகளில் தளர்வுகள் அளித்து கடந்த மாதம் உயர்நிலை, மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுகக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

பின்னர் வகுப்பறைகளுக்கு சென்ற மாணவர்களை சந்தித்த தலைமையாசிரியர் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமாக சந்தேகங்கள் மற்றும் நிறை, குறைகளை ஆசிரியர்களிடம் கூறி உங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என குழந்தைகளிடம் கூறினார்.

Tags:    

Similar News