இமானுவேல் சேகரன் நினைவுநாள்: தென்காசி எம்பி, எம்எல்ஏ மலர் தூவி மரியாதை

இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில் சங்கரன்கோவில் எம்எல்ஏ, தென்காசி எம்பி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.;

Update: 2021-09-11 04:15 GMT

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் சங்கரன்கோவில் எம்எல்ஏ, தென்காசி எம்பி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நினைவிடத்தில் மரியாதை செலுத்த தடைவிதித்திருந்தார்.

இதனையொட்டி 10 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து  இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு  தென்காசி திமுக பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் அவருடைய நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News