கோவையில் பாஜக விற்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம்: வைகோ குற்றச்சாட்டு

கோவையில் பாஜக விற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது வைகோ குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2024-04-18 21:44 GMT

சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

கோவையில், மத்தியில் ஆளும் ஆளும் பா.ஜ.க அரசிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்று கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க தலைவர் வைகோ பேட்டியளித்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவான இன்று காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தனது ஜனநாயக கடமையாற்றினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:-

தேர்தலுக்காக 9 முறை தமிழகம் வந்த பிரதமர் திருக்குறளையும், தமிழையும் பற்றி தற்போது பேசி வருகிறார். புயல், மழை வெள்ளம் வரும் போது லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது தமிழக மக்களை பார்க்க மணமில்லை. தமிழக மக்களையும், தமிழ்நாட்டையும் நேசிக்கும் பிரதமர் புயல், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் வந்திருக்க வேண்டுமே.

தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வீழ்த்துவது எளிதல்ல என்பதனை புரிந்து கொண்ட மோடி, தமிழ் இலக்கியங்களை பற்றி பேசினால் வாக்குகள் கிடைக்கும் என்று எண்ணி 9-முறை தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

இந்திய அளவில் பா.ஜ.க தனியாட்சி பெறுவதற்கு வாய்ப்பில்லை. இந்தியா கூட்டணி மற்றும் அதனை சார்ந்த அனுசரித்து போகின்ற கட்சிகள் சேர்ந்து அமைக்கின்ற கூட்டணி கட்சிதான் அமையும். கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மோடி நினைப்பது நடக்காது. தி.மு.க அபிரிவிதமான வெற்றி பெறும். கோவையில், தேர்தல் ஆணையம் பா.ஜ.க அரசிற்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது.‘

இவ்வாறு வைகோ அளித்த பேட்டியில் கூறினார்.

Tags:    

Similar News