சங்கரன்கோவில் நகராட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
சங்கரன்கோவில் நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு நகராட்சி பொறியாளர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு இன்று நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரியா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள், அதிமுக 12, சுயேச்சை வேட்பாளர்கள் 6 உட்பட மொத்தம் 30 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் அனைவரும் வேனில் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். மேலும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது..