தென்காசி மாவட்டத்தில் ஆறு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு கடந்த 6மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காதை கண்டித்து சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வட்டாட்சியரிடம் பல முறை கோரிக்கை வைத்தும், தேர்தலைக் காரணம் காட்டி இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இன்று கிராம மக்கள் காலிக்குடங்களை கையில் ஏந்தியபடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டக்காரர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராததால் வாயில் முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.