பொங்கல் பரிசில் கூட ஊழல் செய்தவர்கள் திமுகவினர்: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு கூட ஊழல் செய்தவர்கள் தான் திமுகவினர் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2022-02-12 04:45 GMT

கழுகுமலை பேரூராட்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர்கள் 5 வார்டு காளி சாமி மற்றும் 6 வார்டு விஜயா, 15 வார்டு பாஸ்கர், ஆகியோரை ஆதரித்து பேசினார்.

பிரச்சாரத்தில் கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தனர் இதுவரை கொடுக்கவில்லை.

நாங்கள் (அதிமுக) ஆட்சிக்கு வந்திருந்தால் வாஷிங் மெஷின், 6 சிலிண்டர்,நகை கடன் தள்ளுபடி செய்து இருப்போம் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இருப்போம்.

ஆனால் இவர்கள் எங்கள் ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் 2500 ரூபாய் கொடுத்து போதாது எனக்கூறி, 5000 கொடுக்க கூறினர். ஆனால் தற்போது கொரோனா காலகட்டத்தில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இப்படி ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டுதான் இந்த திமுக ஆட்சி திமுக ஆட்சியில் ஒரு வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை. பின்னர் எப்படி இவர்கள் வாக்கு கேட்டு வருவார்கள். பொங்கல் பரிசில் கூட ஊழல் செய்தது தான் திமுக என்றார் அவர்.

Tags:    

Similar News