சங்கரன்கோவிலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியாேகம்

சங்கரன்கோவிலில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் இன்று துவக்கி வைத்தார்.;

Update: 2022-01-04 13:15 GMT

சங்கரன்கோவிலில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் இன்று எம்எல்ஏ ராஜா முன்னிலையில் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் ரூ.24.14 கோடி மதிப்பிலான 4.58 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை சங்கரன்கோவிலில் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் இன்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1088 கோடி மதிப்பீட்டில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 689 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.24.14 கோடி மதிப்பில் பொங்கல் தொகுப்பு 658 நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு பைகளை வழங்கினார். ஒவ்வொரு நியாய விலைக்கடைகளிலும் தினமும் 50 குடும்ப அட்டைகள் வீதம் பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News