தேவர்குளம் அருகே முன்விராேதம் காரணமாக தகராறு: அரிவாளை காட்டி மிரட்டிய நபர் கைது
தேவர்குளம் அருகே முன்விரோதம் காரணமாக, இரு சக்கரவாகனத்தை அரிவாளால் சேதப்படுத்திய நபர் கைது.;
தேவர்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்துப்பட்டியை சேர்ந்த பெரியசாமி(55), என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராமர்பாண்டியன்(38), என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் ராமர்பாண்டியன் சொன்ன இடத்தில் விடவில்லை என முன்விரோதம் இருந்துள்ளது.
மேற்படி இன்று பெரியசாமி அவர் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமர் பாண்டி பெரியசாமியை அரிவாளை காட்டி மிரட்டி, பெரியசாமியின் இருசக்கர வாகனத்தை அரிவாளால் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பெரியசாமி தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ரோச் அந்தோனி மைனர்ராஜ், அவர்கள் விசாரணை மேற்கொண்டு பெரியசாமியை, அரிவாளால் மிரட்டிய ராமர் பாண்டியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.