சங்கரநாராயணர் கோவில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை
சங்கரநாராயணர் சுவாமி கோவில் தெப்பத்தில் கழிவு நீர் கலந்து அசுத்தமாக உள்ளதால் சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை.
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பம் கழிவு நீர் கலந்து அசுத்தமான முறையில் உள்ளதால் சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆவுடை தெப்பமானது அசுத்தமான முறையினர் கழிவு நீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. வருடந்தோறும் தை மாதம் கடைசியில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம் எனவே இந்த மாதம் கடைசியில் தெப்பதிருவிழா நடத்துவதற்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் எந்த வித முன்னேற்பாடுகளும் செய்யாததால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்துஅறநிலையத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக அசுத்தமான முறையில் உள்ள சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் தெப்பத்தை சுத்தம் செய்து தெப்பத்திருவிழா நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாகும்.