சங்கரன்கோவில் பகுதியில் பரவும் டெங்கு காய்ச்சல்: அதிகாரிகள் அலட்சியம்

சங்கரன்கோவில் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2021-11-10 08:00 GMT

சங்கரன்கோவில் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கரிவலம், திருவேங்கடம், குருவிகுளம் பனவடலிசத்திரம், புளியங்குடி, மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல், மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகிய பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு பரவுவதை தடுப்பதற்கு சங்கரன்கோவில், கரிவலம் பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள் அனைவரும் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் குற்றச்சாட்டாகும். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சங்கரன்கோவில் பகுதிகளில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News