ஊரடங்கு நாளில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு காவல் நிலையத்தில் உதவி

ஊரடங்க நாளில் சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காவல் நிலையத்தில் குளிக்க வைத்து புத்தாடை அணிவிக்கப்பட்டது.

Update: 2022-01-10 06:06 GMT

சங்கரன் கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு ஊரடங்கு நாளில் காவல் நிலையத்தில் குளிக்க வைத்து புத்தாடை அணிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நீண்ட காலமாக சரிவர உணவு, உடையின்றி மழையிலும் வெயிலிலும் இருந்துவருகிறார்.

நேற்று ஊரடங்கு என்பதால் பசியால் எழுந்திருக்கக் கூட முடியாமல் இருந்துள்ளார். இதனை அறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான காவல்துறையினர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரை குளிக்க வைத்து, பின்னர் புத்தாடை அணிவித்து சாப்பாடு கொடுத்து மகிழ்ந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபரை அழைத்து வந்து அனைத்து உதவிகள் வழங்கிய காவல்துறையினரை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News