சங்கரன்கோவில்: கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே 15அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை, உயிருடன் தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.;

Update: 2021-11-16 11:15 GMT

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாடு.

சங்கரன்கோவில்: கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்
  • whatsapp icon

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர்,  மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மாடு, மேய்ச்சலுக்காக சென்ற போது,  அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்துள்ளது. இது சம்பந்தமாக, மாட்டின் உரிமையாளர் மாரியப்பன், சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர். 

Tags:    

Similar News