தென்காசி மாவட்டம்-சமூக இடைவெளி இல்லாமல் அமைச்சர் நிகழ்ச்சி நடைபெற்றது

சங்கரன்கோவில்-குருக்கள்பட்டியில் தடுப்பூசி முகாம் துவக்க விழாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத அமைச்சர் சுப்பிரமணியன் கொரோனா பரவும் என பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-05-26 12:29 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் தடுப்பூசி போடும் முகாம் துவக்க விழாவில் சமூக இடைவெளி யை பின்பற்றாத தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவ குழுவினர்களுடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொரோனா தடுப்பு ஊசி முகாம் மற்றும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் முகாம் ஆகியவற்றை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட குருக்கள்பட்டி தனியார் பள்ளியில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வடக்குப்புதூரில் தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் மையத்திற்கு சென்ற அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை, உணவு குறித்து கேட்டறிந்தார்.

அமைச்சருடன் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் மருத்துவ குழுவினர் உடன் சென்றனர்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்ற அனைத்து மருத்துவ முகாம் பகுதிகளிலும் எவ்வித சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை. 10 பேர் நிற்கக்கூடிய அறையில் 100க்கும் மேற்பட்டோர் முண்டியடித்துக் கொண்டு நின்றதாலும், திமுக. கட்சியினரின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், மருத்துவ குழுவினர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News