சங்கரன்கோவிலில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்

சங்கரன்கோவிலில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-08-28 04:45 GMT

சங்கரன்கோவிலில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகஅரசு தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி சம்பந்தமான சந்தேகங்கள் மற்றும் அவற்றினால் ஏற்படும் பலன்கள் பற்றி மருத்துவர் அபிநயா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி அனைத்து ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றில்லா தமிழகத்தை உருவாக்க முடியும் என மருத்துவ குழுக் கேட்டுகொண்டனர். இதில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News