அதிகரிக்கும் கொரோனா தொற்று: அலட்சியம் காட்டும் சங்கரன்கோவில் நகராட்சி

சங்கரன்கோவிலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2022-01-19 13:15 GMT

தென்காசி மாவட்டம்,  சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்,  35க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 12, பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு,  அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ஹோட்டல்களில் பணிபுரிபவர்கள் யாரும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக, ஒமிக்ரான் வைரஸ் பரவவும் வாய்ப்புள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முறையாக கொரோனா விதிகளை பின்பற்றாத கடைகளில் பணிபுரிபவர்கள், பொதுமக்கள் மீது அபராதம் விதித்து, அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அலட்சிய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News