சங்கரன்கோவில் குப்பை கிடங்கில் தொடரும் தீ வைப்பு: நடவடிக்கைக்கு மக்கள் காேரிக்கை

சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-09-24 03:54 GMT

சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் நகராட்சி ஊழியர்களே தீ வைப்பதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது அதனால் அப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் புகை மண்டலத்தில் நாள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தொடர்ந்து நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ வைப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நகராட்சி குப்பைகளை சேகரித்து வரும் ஒப்பந்தக்காரர் மற்றும் அதன் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி குடியிருப்பு மக்களின் கோரிக்கையாகும்.

நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் நகராட்சி ஊழியர்களை தீ வைத்துவிட்டு அதனை அணப்பதற்கு சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினரை அணைப்பதற்கு அழைக்கின்றனர். அதனால் தீயணைப்பு துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News