திசையன்விளையில் காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்
திசையன்விளையில் காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம், முக கவசம்.காவல்துறை ஆய்வாளர் வழங்கினார்.;
திசையன்விளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ. பிரிவின் மாநில தலைவர் மூத்த வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆணைக்கினங்க நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் .கே.பி.கே.ஜெயக்குமார் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி திசையன்விளை காமராஜர் சிலை முன்பு வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர்ஏ.வி.ஜெ. அல்பர்ட் தலைமை வகித்தார்.எஸ்.ஆர்.ஷேக் முகம்மது(மாநில பொதுச் செயலாளர்ஆர்.டி. ஐ.-பிரிவு, தமிழ் நாடுகாங்கிரஸ் கமிட்டி)இராஜீவ்(மாவட்ட பொதுச் செயலாளர்ஆர்.டி.ஐ. பிரிவு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திசையன்விளை காவல் ஆய்வாளர் .ஜமால் மற்றும் சுகாதார ஆய்வாளர் நவராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் முககவசம் கொடுத்து தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் திசை.எஸ்.குமார்,(மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்),மும்பை ஏ..ஜான் கென்னடி (ஓ.பி.சி.பிரிவு மாவட்ட தலைவர்),சாமில் டி.ஜெரால்டு ராஜா (ஓ.பி.சி.பிரிவு நகர தலைவர்)விஜயபெருமாள்(காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர்)மருதூர் மணிமாறன் (மாநில பேச்சாளர் )மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.