சங்கரன்கோவில் எம்எல்ஏ அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களிடம் குறைகேட்பு முகாம்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து அரசு பள்ளி குழந்தைகளிடம் குறைகேட்பு முகாம்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து அரசுப் பள்ளி குழந்தைகளிடம் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட கிராமப்புற அரசுப்பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜா மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோரிடம் நேரடியாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு இருந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும் மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் சிறப்புரையாற்றி அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கரபாண்டியன் நகர செயலாளர் சங்கரன் அணு விஞ்ஞான ஆராய்ச்சியாளர் ராஜேஷ் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் சிறப்புரையாற்றினார்...