கழிவு நீர் கால்வாயில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சங்கரன்கோவில் ரயில்வே பீடர் செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ரயில்வே பீடர் ரோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள் வாறுகாலில் கழிவு நீர் மற்றும் குப்பைகள் அதிகளவில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், கொசுக்கள் மற்றும் பல்வேறு வகையான பூச்சிகள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது.
இதனால், அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் வைத்திருப்பவர்கள் தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
எனவே சங்கரன்கோவில் நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக தேங்கிக்கிடக்கும் கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்றி நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.