மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கல்லூரி மாணவர் போட்டி

சங்கரன்கோவில் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு போட்டியிடும் கல்லூரி மாணவர் பாரதிகண்ணன்.;

Update: 2021-09-26 11:45 GMT

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட ஏழாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலருக்கு திமுக சார்பில் கல்லூரி மாணவர் பாரதி கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார்.

சங்கரன்கோவில் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு போட்டியிடும் கல்லூரி மாணவர் பாரதிகண்ணன் மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட ஏழாவது வார்டில் ஒன்றிய கவுன்சிலருக்கு திமுக சார்பில் போட்டியிடும் கல்லூரி மாணவர் பாரதி கண்ணன் என்பவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவருடைய தகப்பனார் இராஜாதலைவர் மேலநீலிதநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் என்பதால் மிகுந்த அரசியலில் ஈடுபாடு அதிகம் உள்ளதாகவும், மேலும் மக்களுக்கு அதிகமான சேவைகள் செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் இருப்பதால்தான் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறேன். வெற்றி வாய்ப்பு அதிகளவில் உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News