கோ.மருதப்புரம் பஞ்சயாத்து தேர்தல்: மறுவாக்கு எண்ணிக்கைக்கு மக்கள் உண்ணாவிரதம்
கோ.மருதப்புரம் பஞ்சயாத்து தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி கிராமமக்கள் உண்ணாவிரதம்
.சங்கரன்கோவில் அருகே கோ.மருதப்புரம் பஞ்சயாத்து தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் கோ.மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து தோல்வியுற்ற மற்றொரு நபருக்கு வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதனை கண்டித்து விஜயலட்சுமி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி சண்முகநல்லூர் கிராமத்தில் விஜயலட்சுமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.