சங்கரநாராயணர் கோவிலில் முழு ஊரடங்கில் உழவாரப்பணி நடைபெற்றது
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர்சுவாமி திருக்கோவிலில் முழு ஊரடங்கு தினத்தை பயன்படுத்தி உழவாரப்பணி நடைபெற்றது.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் முழு ஊரடங்கை பயன்படுத்தி திருக்கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதில் திருக்கோவிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், மேற்கூரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தன்னார்வலர்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு திருக்கோவிலை சுத்தம் செய்தனர்....