சங்கரன்கோவில் ஆவுடைப் பொய்கை தெப்பத்தை தூய்மைப்படுத்திய பக்தர்கள்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவின் ஆவுடைப் பொய்கை தெப்பத்தை பக்தர்கள் சுத்தம் செய்தனர்.

Update: 2022-02-01 01:00 GMT

சங்கரநாராயண சுவாமி திருக்கோவின், ஆவுடைப் பொய்கை தெப்பத்தை இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் இணைந்து சுத்தம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ஆவுடை பொய்கை தெப்பத்தில்,  ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வெள்ளியன்று தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவை நடத்துவதற்கு ஏதுவாக தெப்பத்தை சீரமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டுமென திருக்கோவிலில் நிர்வாகத்திடம் இந்து அமைப்புகள் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் திருக்கோவில் நிர்வாகம் தெப்பத்தை சீரமைப்பதில் எந்த ஒரு ஆர்வமும் காட்டாமல் இருந்தது.

இதனால்,  இந்து அமைப்புகளும் பக்தர்களும் இணைந்து தாங்களாகவே தெப்பத்தை சீர் செய்யும் பணியை தொடங்கினர். திருக்கோவில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் தெப்பத்தை சீர் அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கு காட்டியதாகக்கூறி,  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தெப்பத்தை சீரமைத்து தெப்பத் திருவிழாவை முறையாக நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News