கொரோனா விழிப்புணர்வு பணியில் சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர்

பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர்.

Update: 2021-08-30 16:38 GMT

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சங்கரன்கோவில் காவல் துறையினர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜின் உத்தரவுபடி, மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அனைத்து ஊர்களிலும் பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி, நம் நாட்டில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ளதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களின் குடும்பத்தினரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், வெளியே பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அப்போது தான் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News